சென்னை ஓபன் கேரம் பதிவு செய்ய இன்று கடைசி நாள்

தினகரன்  தினகரன்
சென்னை ஓபன் கேரம் பதிவு செய்ய இன்று கடைசி நாள்

சென்னை: எஸ்பிளனேடு ஒய்எம்சிஏ சார்பில், சென்னை ஓபன் கேரம் போட்டிகள் (செப்.26-28) நடைபெற உள்ளது. சீனியர், ஜூனியர் (யு14) ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். போட்டிகள் எஸ்பிளனேடு ஒய்எம்சிஏ கட்டிடத்தில் நடத்தப்படும்.பங்கேற்க விரும்புபவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ அலுவலகத்தில், செயலாளர் இவான் சுனில் டேனியலை நேரிலோ அல்லது 91717 17564 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ பேசலாம். அதுபோல், பெரியமேட்டில் உள்ள சென்னை மாவட்ட கேரம் சங்க கவுரவ பொதுச்செயலாளர், முன்னாள் உலக சாம்பியன் மரிய இருதயத்தை 98413 06430 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

மூலக்கதை