சென்னையில் சர்வதேச செஸ் செப்.28க்குள் பதிவு செய்யலாம்

தினகரன்  தினகரன்
சென்னையில் சர்வதேச செஸ் செப்.28க்குள் பதிவு செய்யலாம்

சென்னை: தமிழ்நாடு சதுரங்க சங்கம் நடத்த உள்ள 19வது சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்க, இம்மாதம் 28ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். சர்வதேச தரப் புள்ளிகளுக்கான இந்த செஸ் போட்டி, அக்.3 முதல் அக்.6ம் தேதி வரை அடையாறில் உள்ள தனியார் பள்ளியில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில்  உள்ளூர் வீரர், வீராங்கனைகள் மட்டுமின்றி  உலக, இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் என சர்வதேச வீரர், வீராங்கனைகள்  (8 வயது முதல் 60 வயது வரை) பங்கேற்க உள்ளனர்.பங்கேற்க விரும்புவோர் இம்மாதம் 28ம் தேதி வரை பதிவு  செய்யலாம். பதிவுக்கட்டணம் ₹1250. மேலும் விவரங்களுக்கு:  www.tamilchess.com, www.easypaychess.com,  99404 58484.

மூலக்கதை