அண்ணா பல்கலை. ஹாக்கி செயின்ட் ஜோசப் சாம்பியன்

தினகரன்  தினகரன்
அண்ணா பல்கலை. ஹாக்கி செயின்ட் ஜோசப் சாம்பியன்

சென்னை: அண்ணா  பல்கலைக் கழக மூன்றாம் மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி அரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் பைனலில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி -  கிண்டி அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி (ஏ.சி.டெக்) அணிகள் மோதின.இதில் செயின்ட் ஜோசப் 4-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ஏ.சி.டெக் கல்லூரி 2வது இடத்தைப் பிடித்தது.

மூலக்கதை