அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் மோடி பங்கேற்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் மோடி பங்கேற்பு

ஹூஸ்டன்: ஹூஸ்டனில் நடந்த அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.


இந்தியா அமெரிக்கா நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 7 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பயணத்தின் முதற்கட்டமாக, ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மோடி பேசினார். கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், வெளியுறவு செயலர் விஜய் கோக்லேயும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 16 நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா - ஹூஸ்டனுக்கு இடையே 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இதன்மூலம் ஈரான் ஈராக்கை காட்டிலும் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.


பிரதமர் மோடி தன் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான 20 பில்லியன் அமெரிக்க டாலர் வரிவிதிப்பு குறைப்பு அறிவிப்பினை வெளியிட்டார். இந்த வரிகுறைப்பு மூலம் அமெரிக்க நிறுவனங்களின் கவனத்தை இந்தியா ஈர்க்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில், செப்.25ல் ப்ளூம்பெர்க்கில் 40 நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாட்டில் மோடி கலந்து கொள்வார் என்பது குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் வெளியிட்ட செய்தி: ஹூஸ்டன் நகரில், எரிசக்தி துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பு பலன் உள்ளதாக இருந்தது. எரிசக்தி துறையிலும், இந்தியா அமெரிக்கா இடையிலான முதலீடு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது எனக்கூறியுள்ளார்.

மூலக்கதை