பேச்சு நடத்த இந்தியா, பாக்.,குக்கு உதவத் தயார் : குட்டரெஸ்

தினமலர்  தினமலர்
பேச்சு நடத்த இந்தியா, பாக்.,குக்கு உதவத் தயார் : குட்டரெஸ்

நியூயார்க்: 'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு நடத்துவதே, தற்போதைக்கு தேவையான நடவடிக்கை. இந்தியா, பாக்., கேட்டுக் கொண்டால், அவர்களுக்கு உதவத் தயாராக உள்ளேன்' என, ஐ.நா., பொதுச் செயலர் கூறியுள்ளார்.


ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, நம் அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, சர்வதேச அமைப்புகளில், பாக்., பிரச்னையை எழுப்பி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விரைவில் நடக்க உள்ளது. 'இந்தக் கூட்டத்திலும், காஷ்மீர் விவகாரத்தை பேசுவோம்' என, பாக்., கூறி வருகிறது.


இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது: எந்த நாடாக இருந்தாலும், மனித உரிமையை மதிக்க வேண்டும். இந்தியா, பாக்., இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இரு நாடுகளும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டியது மிக அவசியம். இரு நாடுகளும் கேட்டுக் கொண்டால், அதற்கு உதவ, என்னுடைய அலுவலகம் தயராக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை