'என் திருமணத்தை கடவுள் நடத்தி வைப்பார்

தினமலர்  தினமலர்
என் திருமணத்தை கடவுள் நடத்தி வைப்பார்

நடிகை பூர்ணா, புளூவேல் இணைய விளையாட்டில் சிக்கும் மாணவனை காப்பாற்றும், போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். படத்தின் பெயரும், புளூவேல் தான்.

''நான் நடனத்திற்கு அடிமை. மற்றபடி, 'மொபைல் கேம்'களுக்கு அடிமை இல்லை. என் நண்பர்கள் சிலர், மொபைல் கேமில் ஆழ்ந்து விளையாடுவதை பார்த்திருக்கிறேன். நடனம் எனக்கு பிடிக்கும் என்பதால், நீளமான தலைமுடி வைத்திருந்தேன். ''ஒரு படத்திற்காக மொட்டை போட வேண்டியதாகி விட்டது. தற்போது, 'விக்' வைத்து, சமாளித்து வருகிறேன். என்னை பொறுத்தவரை, நாயகி வேடம் இல்லை என்றாலும், நல்ல வேடம் என்றால் ஏற்றுக் கொள்கிறேன். காப்பான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன்,'' என்கிறார், பூர்ணா.

'வயதாகி கொண்டே போகிறதே... எப்போது திருமணம்!' எனக் கேட்டால், ''என் திருமணத்தை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். என் திருமணத்தை கடவுள் நடத்தி வைப்பார்,'' என, சிரித்தபடி கூறுகிறார், அவர்.

மூலக்கதை