இன்று 2 மாநில தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு ?

தினமலர்  தினமலர்
இன்று 2 மாநில தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு ?

புதுடில்லி: மஹாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில சட்டசபைகளின் பதவி காலம் நிறைவடையவிருப்பதையொட்டி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.இது குறித்து தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: மஹாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பணிகள் வரும் தீபாவளிக்குள் முடித்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மஹாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை நக்சல் ஆதிக்கமுள்ள பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை ஆய்வு செய்த பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை