மரங்களை வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நட நடவடிக்கை

தினமலர்  தினமலர்
மரங்களை வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நட நடவடிக்கை

மதுரை : மதுரையில் ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்படும் மரங்களை உயர்நீதிமன்ற கிளை உத்தரவையடுத்து வேருடன் பெயர்த்து வேறு இடங்களில் நட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


ரோடு விரிவாக்கத்துக்காக மரங்களை அகற்றும் போது அதற்கு பதில் 12 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பராமரிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் அகற்றப்படும் மரங்களுக்கு பதில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுவதில்லை.

மதுரை மாவட்டத்தில் அகற்றப்படும் மரங்களை வேருடன் பெயர்த்து வேறு இடங்களில் நட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.நேற்று நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில், கோட்ட செயற்பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர் தங்கபாண்டி, இளநிலை பொறியாளர் வெங்கடேஷ், வேளாண் பட்டதாரி ஆர்தர் ஆகியோர் உத்தங்குடியில் அகற்றப்படவுள்ள 38 மரங்களை வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நட்டு வளர்ப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இதற்காக குறிப்பிட்ட மரங்களை வேருடன் அகற்றுவதற்கான முயற்சியாக எட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. குழிக்குள் வெப்பம் தணிந்ததும் அகற்றப்படும் மரம் அங்கு நடப்படும். உத்தங்குடி முதல் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை வரை ரோட்டின் இரு புறமும் மரக்கன்றுகளையும் நட்டனர்.

மூலக்கதை