எய்ம்ஸ் மருத்துவமனை பணி விரைவில் துவங்குகிறது

தினமலர்  தினமலர்
எய்ம்ஸ் மருத்துவமனை பணி விரைவில் துவங்குகிறது

திருப்பரங்குன்றம் : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட பணிகளுக்கு கலெக்டர் ராஜசேகர் முன் அனுமதி வழங்கியுள்ளதால் விரைவில் துவங்கஉள்ளது.

தோப்பூர் கோ.புதுப்பட்டியில் 199.98 ஏக்கர் இம்மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1,264 கோடியில் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. பிரதமர் மோடி ஜனவரி யில் அடிக்கல் நாட்டினார். மண் பரிசோதனை, காவிரி கூட்டு குடிநீர் சப்ளைக்கான ஆய்வு நடந்துள்ளது. தற்போது கூத்தியார் குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் வரை ஒருவழி ரோட்டை இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடக்கிறது.

மருத்துவமனை கட்டடப் பணிகளை துவங்க டில்லி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு கலெக்டர் முன் அனுமதி வழங்கி அதற்கான கடிதம் அனுப்பினார். அதன் நகல் திருப்பரங்குன்றம் தாசில்தார் நாகராஜூக்கும் அனுப்பப்பட்டுள்ளது.விரைவில் கட்டுமான பணி துவங்கவுள்ளது.

மூலக்கதை