இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

தினகரன்  தினகரன்
இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

ஜாவா: இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய -மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்  தெரிவித்துள்ளது. இந்தோனேஷியா வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜாவா தீவில் முதல்  நிலநடுக்கம் பதிவான நிலையில், அடுத்த சில நொடிகளில் பாலி தீவில்சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. முன்னதாக ரிக்டர் அளவில் 5.6 ஆக  அதிர்வு பதிவான நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிர்வு 6.1 ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி  எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனினும், நிலநடுக்கத்தால் இதுவரை ஏற்பட்ட பாதிப்போ அல்லது உயிரிழப்பு குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட  பகுதியில் பல்வேறு எரிமலைகள் இருப்பதால் அது வெடிக்கும் அபாயமும் உள்ளதால் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை  எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மூலக்கதை