நிரவ் மோடி காவல் நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
நிரவ் மோடி காவல் நீட்டிப்பு

லண்டன்: இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனில் தலைமறைவான வைரவியாபாரி நிரவ் மோடிக்கு அக்., 17 வரை காவல் நீட்டிப்பு.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் தலைமறைவானார். இதையடுத்து நிரவ் மோடி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர், நிதி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மேலும் நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இங்கிலாந்தில் இருக்கும் நிரவ் மோடியை நாடு கடத்த வேண்டும் என லண்டன் கோர்ட்டில் இந்தியா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 20ல் லண்டன் போலீசார், நிரவ் மோடியை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரித்து வந்தனர். இன்று (செப்., 19) இந்த வழக்கை விசாரித்த வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம், அவரின் நீதிமன்ற காவலை அக்., 17 வரை நீடித்து உத்தரவிட்டது.

மூலக்கதை