பாக்.குக்கு உளவு பார்த்தவர் கைது

தினகரன்  தினகரன்
பாக்.குக்கு உளவு பார்த்தவர் கைது

குர்தாஸ்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாபை சேர்ந்த ஒருவர் ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை வழியாக சீக்கிய யாத்திரீகர்கள் விசா இல்லாமல் கர்தார்பூர் செல்ல முடியும்.  குருதாஸ்பூரில் இருந்து பாகிஸ்தான் எல்லை வரையிலான சாலையை இந்தியாவும், கர்தார்பூரில் இருந்து எல்லை வரையிலான சாலையை பாகிஸ்தானும் அமைக்கின்றன. இந்நிலையில், கர்தார்பூர் வழித்தட பணிகள் மற்றும் கன்டோன்மென்ட் புகைப்படத்தை பஞ்சாப்பின் விபன் சிங் என்பவர் பாகிஸ்தானில் உள்ள ஒருவருக்கு வழங்கியுள்ளார். இது குறித்த தகவலின்பேரில் விபன் சிங்கை ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை