உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,608 கோடி விடுவிப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,608 கோடி விடுவிப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை: சென்னை,  நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நவராத்திரி  விற்பனைக் கண்காட்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட  அமைச்சர்கள் துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.இதை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டி : தமிழகத்தின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய அடிப்படை மற்றும்  செயல்திறன் மானியம் 4,977 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு 731 கோடியும், உள்ளாட்சி  அமைப்புகளுக்கு 876 கோடியும் என்று மொத்தம் 1608 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இன்னும் நிலுவையில் உள்ள 3,369 கோடியை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

மூலக்கதை