தமிழகத்தில் 70 கோடி செலவில் காவல்துறை, தீயணைப்பு துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 70 கோடி செலவில் காவல்துறை, தீயணைப்பு துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் 37 கோடியே 94 லட்சத்து 32 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 288 காவலர் குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து  வைத்தார். மேலும், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள 16 காவலர் குடியிருப்புகள், ராயபுரத்தில் கட்டப்பட்டுள்ள 28  காவலர் குடியிருப்புகள்,  திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் கட்டப்பட்டுள்ள 118 காவலர் குடியிருப்புகள்,சென்னை - கண்ணகி நகர், காஞ்சிபுரம் மாங்காடு மற்றும் கானத்தூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள், அசோக்நகர், சிவகாசியில் கட்டப்பட்டுள்ள ஆயுதக் கிடங்கு, திருத்தணி மற்றும் அரக்கோணத்தில் தீயணைப்பு  நிலையங்கள், வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான 13 குடியிருப்புகள் என மொத்தம் 69 கோடியே 49 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு நிலைய கட்டிடங்களை  முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப்-1) மூலமாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 8 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

மூலக்கதை