என்பேனரை கிழியுங்க,ரசிகன் மீது கை வைக்காதீர்கள் விஜய்

தினமலர்  தினமலர்
என்பேனரை கிழியுங்க,ரசிகன் மீது கை வைக்காதீர்கள் விஜய்

என்பேனரை கிழியுங்கள் ரசிகன் மீது கை வைக்காதீர்கள் என பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார்

விழாவில் அவர் பேசியதாவது: என் படத்தை உடையுங்கள் பேனரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகன் மீது கைவைக்காதீர்கள் . நாம கோல் போடுறதையும் தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். வாழ்க்கையும் ஒரு கால்பந்து மாதிரி தான். நாம கோல் போட கூடாது என ஒரு கூட்டம் தடுக்க வரும் உழைத்தவர்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி ரசிகர்கள் தான்.

நம்ம கூட இருக்கிறவங்களே சேம்சைடு கோல் போடுவாங்க. யாருடையும் அடையாளத்தை எடுத்துக் காதீங்க.பெண்கள் ஜெயிக்கிற படத்தில் வாழ்க்கையில் ஜெயிச்ச நயன்தாரா நடித்திருப்பது சந்தோஷம் தான். எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும் என எம்.ஜி.ஆரை பற்றி குறித்து பேசிய விஜய் காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக பேசியவரை இறக்கி விட்டார் எம்.ஜி.ஆர். என கூறினார். அரசியலில் புகுந்து விளையாடுங்க. ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க.

சுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் யார் மீது பலி போட வேண்டுமோ அதை செய்யாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பலி போடுகின்றனர். சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஹேஷ் டேக் போட்டால் நன்றாக இருக்கும் . சமூக வலை தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத் வேண்டும். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.

மூலக்கதை