யாருடைய ரசிகர்: துருவ் விக்ரம் பதில்

தினமலர்  தினமலர்
யாருடைய ரசிகர்: துருவ் விக்ரம் பதில்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் பனிதா சந்து, பிரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் ரிலீஸாகிறது.

சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம், தான் விஜய்யின் ரசிகர் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் துருவ். அதனால் விக்ரமின் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும், துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா படத்தை சமூக வலைதளங்களில் வரவேற்று வருகின்றனர்.

மூலக்கதை