சாஹோ பார்க்காத ஸ்ரத்தா கபூர்

தினமலர்  தினமலர்
சாஹோ பார்க்காத ஸ்ரத்தா கபூர்

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வெளியான படம் சாஹோ. சுஜீத் இயக்கிய இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியில் பெரிய அளவில் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் சாஹோ படத்தை இதுவரை பார்க்கவில்லை என ஸ்ரத்தா கபூர் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில் படப்பிடிப்பு, டப்பிங்கின் போது மட்டும் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்த்தேன். தியேட்டருக்கு சென்று இன்னும் முழு படத்தையும் பார்க்கவில்லை என்கிறார். மேலும், சாஹோ படத்தை சிலர் தவறுதலாக விமர்சனம் செய்தனர். ஆனபோதும் பெருவாரியான மக்கள் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து வெற்றிப் படமாக்கி விட்டனர். அந்தவகையில், விமர்சனங்கள் படத்தின் வெற்றியை பாதிக்காது என்பதை நான் தெரிந்து கொண்டேன் என கூறியிருக்கிறார்.

மூலக்கதை