மீண்டும் தள்ளுபடி: ‛காப்பான்' சிக்கல் தீர்ந்தது

தினமலர்  தினமலர்
மீண்டும் தள்ளுபடி: ‛காப்பான் சிக்கல் தீர்ந்தது

இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான். இந்த படம் நாளை(20ம் தேதி) திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும், இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், தயாரிப்பு தரப்பு விளக்கத்தை கேட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், ஜான் சார்லஸ் நேற்று மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னுடைய தரப்பு வாதத்தை கேட்காமல், வழக்கை இறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று(செப்.,19) நீதிபதி மணிக்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பான் படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மூலக்கதை