மலையாள படங்களுக்கு ஒரே ஹீரோயினை சிபாரிசு செய்யும் அனுராக் காஷ்யப்

தினமலர்  தினமலர்
மலையாள படங்களுக்கு ஒரே ஹீரோயினை சிபாரிசு செய்யும் அனுராக் காஷ்யப்

இந்தியில் பிரபல தயாரிப்பாளராக, இயக்குனராக, நடிகராக இருந்தாலும் தென்னிந்திய மொழி படங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் அனுராக் காஷ்யப். இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் மிரட்டலான வில்லனாக நடித்த இவர், தற்போது மலையாளத்திலும் இந்தியிலும் உருவாகியுள்ள மூத்தோன் என்கிற படத்திற்கு இணை கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

நிவின்பாலி நடித்த படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா என்பவர் நடித்துள்ளார். இவரை இந்தியில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது அனுராக் காஷ்யப் தான். அதனால் மூத்தோன் படத்தில் கதாநாயகியாக இவரை இயக்குனர் கீது மோகன்தாஸுக்கு சிபாரிசு செய்தது அனுராக் காஷ்யப் தான்.

இதையடுத்து மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் குறூப் என்கிற படத்திலும் இவரை கதாநாயகியாக சிபாரிசு செய்து சேர்த்துவிட்டார். அனுராக் காஷ்யப் துல்கர் நடித்த கம்மட்டிப்பாடம் படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியும், அனுராக் காஷ்யப்பும் நண்பர்கள் என்பதால் ராஜீவ் ரவி மூலமாக துல்கர் படத்திற்கு இந்த சோபிதா துலிபாலாவை சிபாரிசு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

மூலக்கதை