என் தங்கை நஸ்ரியா: உருகும் பிரித்விராஜ்

தினமலர்  தினமலர்
என் தங்கை நஸ்ரியா: உருகும் பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கூடே' என்கிற படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார் நஸ்ரியா.. தனது துறுதுறு செயல்பாடுகளால் பிரித்விராஜ் மற்றும் அவரது குடும்பத்தை ரொம்பவே கவர்ந்து விட்டார். அப்போதிருந்து பிரித்விராஜூக்கு நிஜமான தங்கையாகவே மாறி போய்விட்டார் நஸ்ரியா.

பிரித்விராஜூக்கும் தங்கள் வீட்டில் இருவருமே ஆண்களாக பிறந்து விட்டதால் தங்கை என ஒரு பெண் இல்லாத ஏக்கம் நீண்ட நாளாகவே இருந்து வந்ததாம். அதனால் நஸ்ரியா தனக்கு செல்ல தங்கையாக மாறியது சந்தோஷம் என்கிறார்.

மூலக்கதை