இந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு

தினமலர்  தினமலர்
இந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு

வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி நிறைவு நாளில், அமெரிக்க ராணுவ இசைக்குழு, இந்திய தேசிய கீதத்தை இசைத்தது.

அமெரிக்காவின் லூயிஸ் மெக்கார்ட் பயிற்சி மையத்தில், கடந்த 5ம் தேதி இந்தியா - அமெரிக்க ராணுவ வீரர்களின் கூட்டு பயிற்சி துவங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான 15வது பயிற்சியான, இந்த பயிற்சிக்கு, 'யுத் அப்யாஸ் 2009' என பெயரிடப்பட்டது. இந்த பயிற்சி நேற்று( செப்.,18) நிறைவு பெற்றது. பல்வேறு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.


பயிற்சியின் போது, அமெரிக்க ராணுவ இசைக்குழுவினர் , இந்திய தேசிய கீதத்தை முழுமையாக இசைத்தனர். இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமெரிக்க ராணுவ வீரர் ரன்பிர் கவுர் என்ற பெண் அதிகாரியும் கலந்து கொண்டார். அமெரிக்க ராணுவத்தில் இணைந்த, முதல் சீக்கிய பெண் இவர்.

அவர் கூறுகையில், நான் இந்தியாவில் பிறந்தாலும், அமெரிக்காவிற்கு 1993ம் ஆண்டு அழைத்து வரப்பட்டேன். 2003 முதல் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். இந்திய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பயிற்சியில், பெண் வீராங்கனைகளும் பங்கேற்றது சிறப்பானது. இரு தரப்பிலும் பல ஆலோசனைகள் நடந்துள்ளன. இந்திய ராணுவத்திடம் இருந்து நிறைய கற்று கொண்டுள்ளேன். மீண்டும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்றார்.

மூலக்கதை