மற்ற நாடுகளில் குடியேறியோர்: இந்தியர்கள் தான் முதலிடம்

தினமலர்  தினமலர்
மற்ற நாடுகளில் குடியேறியோர்: இந்தியர்கள் தான் முதலிடம்

நியூயார்க்:ஐக்கிய நாடுகளின், பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு, சர்வதேச அளவில் குடியேறிகள் மற்றும் அகதிகள் குறித்த புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தாண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உலகெங்கும், 27.2 கோடி பேர், தங்களுடைய சொந்த நாட்டில் இல்லாமல் மற்றொரு நாட்டில் குடியேறி உள்ளனர். பட்டியலில், முதல், 10 இடங்களில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள், மொத்த குடியேறிகளில், மூன்றில் ஒரு பங்காக உள்ளனர்.இந்தப் பட்டியலில், 1.75 கோடி பேருடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மெக்சிகோவை சேர்ந்த, 1.18 கோடி பேர், மற்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். 1.07 கோடி பேருடன், சீனா இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.அதே நேரத்தில், இந்தியாவில், 51 லட்சம் வெளிநாட்டவர் குடியேறி உள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 0.4 சதவீதமாகும்.

வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களே, இந்தியாவில் அதிக அளவில் புலம் பெயர்ந்துள்ளனர். இதைத் தவிர, இந்தியாவில், 2.07 லட்சம் அகதிகள் உள்ளனர்.அதிக அளவு வெளிநாட்டவர்கள் புலம் பெயர்ந்துள்ள நாடுகளில், 5.1 கோடி பேருடன், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இது, புலம் பெயர்ந்தோரில், 19 சதவீதமாகும். தலா, 1.3 கோடி பேருடன் ஜெர்மனி மற்றும் சவுதி அரேபியா அதற்கடுத்த நிலையில் உள்ளன.

மூலக்கதை