சென்னையில் விடிய விடிய கனமழை

தினமலர்  தினமலர்
சென்னையில் விடிய விடிய கனமழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்தது.


தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.


சென்னை- கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகரிலும் கனமழை கொட்டியது.

மழை அளவு

அதிகபட்சமாக திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 21 செ.மீ., மழை பதிவானது. பூண்டி 20 செ.மீ., திருத்தணி, தாமரைப்பாக்கம் தலா 15 செ.மீ., சோழவரத்தில் 13 செ.மீ., திருவலங்காடு 12 செ.மீ பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிபூண்டியில் தலா 10 செ.மீ., மழை பதிவானது.

மூலக்கதை