விழாக்கால தள்ளுபடி விற்பனை; ‘அமேசான்’ நிறுவனம் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
விழாக்கால தள்ளுபடி விற்பனை; ‘அமேசான்’ நிறுவனம் அறிவிப்பு

புதுடில்லி: ‘அமேசான்’ நிறுவனம் அதன், ‘கிரேட் இண்டியன் பெஸ்டிவல்’ எனும், பண்டிகை கால சலுகை விற்பனை கொண்டாட்டத்தை, 29ம் தேதி நள்ளிரவில் துவங்குகிறது.

இச்சலுகை விற்பனை, அக்டோபர், 4ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதில், ‘பிரைம்’ வாடிக்கையாளர்கள், 28ம் தேதி மதியம், 12:00 மணி முதலே இந்த சலுகை விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் அவற்றுக்கான உதிரிபாகங்கள், ‘டிவி’ மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், நுகர்வோர் மின்னணு பொருட்கள், உடைகள், சமையலறை தேவைகள் என, அனைத்து விதமான பொருட்களும், அதிக சலுகை விலையில் விற்பனை செய்யப்படும். ஸ்மார்ட் போன்களுக்கு, 40 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும். சமீபத்திய புளுடூத் ஹெட் செட்டுகளுக்கு, 70 சதவீதம் வரை தள்ளுபடி.

‘டிவி’க்களுக்கு, 70 சதவீதம் வரையிலும், கைக்கடிகாரம், காலணிகளுக்கு, 70 சதவீதம் வரையிலும், ஆடை வகைகளுக்கு, 90 சதவீதம் வரையும் தள்ளுபடி வழங்கப்படும் என, அமேசான் தெரிவித்துள்ளது.மேலும், எக்ஸ்சேஞ்ச் வசதி, கேஷ் பேக் என, கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும்.

மூலக்கதை