டிரம்ப்பை இரண்டு முறை சந்திக்கும் மோடி

தினமலர்  தினமலர்
டிரம்ப்பை இரண்டு முறை சந்திக்கும் மோடி

வாஷிங்டன்: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை இரண்டு முறை சந்திக்க உள்ளார்.

பிரதமராக இரண்டாவது முறை மோடி பதவியேற்ற பின்னர், இரண்டு முறை டிரம்ப் - மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டின் போதும், பிரான்சில் நடந்த ஜி 7 கூட்டத்திலும் இருவரும் சந்தித்து கொண்டனர்.

இந்நிலையில், வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி, அமெரிக்கா செல்கிறார். அப்போது, ஹூஸ்டன் நகரில் நடக்கும் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார். இதன் பிறகு, ஐ.நா., பொது கூட்டத்தில் அதிபர் டிரம்ப்பும், மோடியும் உரையாற்ற உள்ளனர். அந்த நேரத்தில் இருவரும் சந்திக்க உள்ளனர்.

இது இந்தியா அமெரிக்கா இடையிலான உறவின் தன்மையை வெளிப்படுத்துவதாக, அமெரிக்காவிற்கான இந்திய தூதர் சிறிங்களா கூறியுள்ளார். மேலும் அவர், இந்த நூற்றாண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பு, இரு நாட்டு உறவில் முக்கிய பங்காற்றுகிறது எனவும் கூறியுள்ளார்

மூலக்கதை