குற்றவியல் வழக்குகளின் விசாரணையின் போது விசாரணை அதிகாரி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்: மதுரை கிளை

தினகரன்  தினகரன்
குற்றவியல் வழக்குகளின் விசாரணையின் போது விசாரணை அதிகாரி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்: மதுரை கிளை

மதுரை: குற்றவியல் வழக்குகளின் மேல்முறையீட்டு விசாரணையின் போது, விசாரணை அதிகாரி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தவறும் பட்சத்தில் விசாரணை அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்படும் எனவும் அறிவித்துள்ளது. விசாரணை அதிகாரிகள் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தடைபடுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அதிக வழக்குகள் தேக்கமடைவதாகவும் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

மூலக்கதை