குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மோடிக்கு வெற்றி அர்ப்பணம்: இந்திய வீரர் அமித் பங்கல் ட்விட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மோடிக்கு வெற்றி அர்ப்பணம்: இந்திய வீரர் அமித் பங்கல் ட்விட்

மாஸ்கோ: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் எகடரின்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், 52 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அமித் பங்கல், துருக்கி குத்துச்சண்டை வீரர் படுஹான் சிட்ஃப்சி உடன் மோதினார்.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய பங்கல் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, காலிறுதிப் போட்டியில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்வார்.

பிரதமர் மோடி நேற்று 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தனது இந்த வெற்றியை மோடிக்கு அர்ப்பணிப்பதாக அமித் பங்கல் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இந்தத் தொடரில் இந்திய வீரரான கவிந்தர் சிங் பிஷ்ட் (57 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ), சஞ்ஜித் (91 கிலோ) ஆகியோரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை