தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்தபோது ரயிலை பார்த்து பயந்து ஓடிய மாணவன் கால் துண்டானது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்தபோது ரயிலை பார்த்து பயந்து ஓடிய மாணவன் கால் துண்டானது

திருச்சி: தற்கொலை செய்வதற்காக தண்டவாளத்தில் படுத்தபோது ரயிலை பார்த்து பயந்து எழுந்து ஓடிய மாணவன் கால்கள் துண்டானது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சிலையாத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம்.

இவரது மகன் மணிகண்டன்(21). இவர் தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ராம்ஜிநகர் அருகே படுகையில் உள்ள மாமா ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தார். நேற்று அதிகாலை எ. புதூர் அரசு காலனி எதிரே உள்ள தண்டவாளத்தில் இரண்டு கால்களின் பாதங்கள் துண்டாகி ரத்தம் வழிந்தோட மணிகண்டன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதுபற்றி தகவலறிந்ததும் எ. புதூர் போலீசார் சென்று ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை மீட்டு உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ரயில்வே போலீசாருக்கு தகவல்  அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ‘’எ. புதூரில் உள்ள மாமா வீட்டிற்கு செல்வதாக கூறி வந்த மணிகண்டன், அதிகாலை 5. 30 மணியளவில் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார்.

அப்போது மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரயிலின் வேகத்தை பார்த்து பயந்து எழுந்து ஓட முயன்றுள்ளார்.

அப்போது அவர் தடுமாறி விழுந்ததில் ரயில் ஏறி 2 கால்களின் பாதங்கள் துண்டானது’’ என்று தெரிய வந்தது.

.

மூலக்கதை