பிகில் வெளியீட்டுத் தேதி : தியேட்டர்காரர்களின் விருப்பம்

தினமலர்  தினமலர்
பிகில் வெளியீட்டுத் தேதி : தியேட்டர்காரர்களின் விருப்பம்

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த தேதியில் வெளியாகும் என்பது பற்றி கடந்த சில வாரங்களாகவே பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன.

இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பட வெளியீட்டுத் தேதியைப் பற்றி வதந்திகளைப் பரப்பாதீர்கள். படம் சென்சார் ஆன பிறகே அது பற்றி அறிவிப்போம் என்றார்.

இருப்பினும் எந்த தேதியில் படம் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என சில தியேட்டர்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தீபாவளி அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வருகிறது. அன்றைய தினம் படம் வெளிவந்தால் அன்று ஒரு நாள் மட்டுமே வசூல் மிக அதிகமாக இருக்கும். மறுநாள் திங்கள் கிழமை வேலை நாள் என்பதால் வசூலில் இறக்கம் வரலாம்.

அதுவே அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை படத்தை வெளியிட்டால் சனி, ஞாயிறு விடுமுறையிலும் முதல் நாள் வசூலைப் பெறலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

இதன்படி பார்த்தால் அக்டோபர் 24ம் தேதியைத்தான் தயாரிப்பாளர்களும் பிகில் வெளியீட்டுத் தேதியாக மனதில் வைத்திருப்பார்கள் எனத் தெரிகிறது.

மூலக்கதை