இன்றைய ஹீரோயின்களை விளாசும் விஜயசாந்தி

தினமலர்  தினமலர்
இன்றைய ஹீரோயின்களை விளாசும் விஜயசாந்தி

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் 1980ல் வெளிவந்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் விஜயசாந்தி. ஆனால், தமிழை விட தெலுங்கில்தான் அவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழைப் பெற்றார். குறிப்பாக ஆக்ஷ்ன் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் அவர் மட்டும்தான்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் 'சரிலேறு நீக்கெவரு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் மீடியாவினரைச் சந்தித்த போது இன்றைய ஹீரோயின்களைப் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

“வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் காலத்தில் ஹீரோயின்களின் உழைப்பு மனதில் பதியும்படி இல்லை. எங்களது காலத்தில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எங்களது வீட்டில் கால்ஷீட்டிற்காக காத்துக் கிடப்பார்கள். ஒரு வருடத்திற்கு ஒரு டஜன் படங்களில் நடிப்போம். அந்த ஒரு புகழும், வாழ்நாளும் இந்தக் காலத்தில் எங்கே போயிற்று,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை