சென்னை ஐஐடியில் 21ம் தேதி ரோபாடிக் கண்காட்சி: அனுமதி இலவசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை ஐஐடியில் 21ம் தேதி ரோபாடிக் கண்காட்சி: அனுமதி இலவசம்

சென்னை: சென்னை ஐஐடியில் வரும் 21ம் தேதி ரொபாடிக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.


சென்னை ஐஐடிக்கு சமீபத்தில் மத்திய அரசின் இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் தரச்சான்று வழங்கப்பட்டது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை ஐஐடிக்கு ரூ. 1,000 கோடி ஆராய்ச்சி பணிகளுக்காக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடி உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், சென்னை ஐஐடியில் புதிய கண்டுபிடிப்புகளை பொதுமக்கள் பார்வையிட செப்டம்பர் 21ம் தேதி ‘ஓப்பன் ஹவுஸ்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை ஐஐடியின் இன்ஜினியரிங் டிசைன் துறை சார்பில் அடுத்த தலைமுறை இயந்திரங்கள்,ரொபாடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ரொபாடிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் குறித்து மாணவர்கள், பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இலவசமாக காணலாம். இதற்கு https://ed. iitm. ac. in/~openhouse/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பப்படும். தொழில்துறை நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடுவார்கள்.

ஆட்டோ மோட்டிவ் இன்ஜினியரிங் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி இயந்திர மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.


.

மூலக்கதை