கொல்கத்தா விமான நிலையத்தில் மோடி மனைவியை சந்தித்த மம்தா: இருவரும் நலம் விசாரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொல்கத்தா விமான நிலையத்தில் மோடி மனைவியை சந்தித்த மம்தா: இருவரும் நலம் விசாரிப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னை சந்தித்து பேசினார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியின் மனைவியான யசோதா பென்னை சந்தித்தார். இச்சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.

தொடர்ந்து யசோதா பென்னுக்கு, மம்தா பானர்ஜி புடவை ஒன்றை பரிசளித்தார்.

முன்னதாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கல்யாணேஸ்வரி கோயிலில் வழிபட 2 நாள் பயணமாக வந்திருந்த யசோதா பென், கொல்கத்தா வழியாக குஜராத்துக்கு திரும்பினார். அப்போது, இன்று பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, டெல்லி செல்வதற்காக மம்தாவும் கொல்கத்தா விமான நிலையம் வந்திருந்தார்.

மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையிலுள்ள நிதியை பெறுதல் உள்ளிட்டவை குறித்து மோடியுடன் மம்தா பேசுவார் எனத் தெரிகிறது.

இப்படி ஒரு தருணத்தில், மம்தாவும் யசோதா பென்னும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை