சாட்டிலைட் உரிமையில் சாதனை படைத்த 'சைரா'

தினமலர்  தினமலர்
சாட்டிலைட் உரிமையில் சாதனை படைத்த சைரா

தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து அடுத்த பிரம்மாண்ட சரித்திரப் படைப்பாக வெளிவர உள்ள படம் 'சைரா'. சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம்.

இந்த மல்டி ஸ்டார் கூட்டணியுடன் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சரித்திரப் படம்.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் 125 கோடி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடித்த '2.0' படத்தை அந்த நிறுவனம் 110 கோடி கொடுத்து வாங்கியதே தென்னிந்தியப் படங்களில் சாட்டிலைட் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது 'சைரா' முறியடித்துள்ளது.

ஏற்கெனவே, இப்படத்தின் டிஜிட்டல் உரிமை 40 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது. இன்னும் இசை உரிமை, மற்ற உரிமைகள் மூலமே இப்படத்தின் பட்ஜெட்டான 250 கோடியை அவர்கள் பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.

தியேட்டர் உரிமையும், அதன் மூலம் கிடைக்கும் வசூலும் தயாரிப்பாளர்களுக்கு மேற்கொண்டு கிடைக்கும் லாபம்தான்.

மூலக்கதை