இந்தியை திணிக்க முடியாது : ரஜினி

தினமலர்  தினமலர்
இந்தியை திணிக்க முடியாது : ரஜினி

சென்னை : தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்க முடியாது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இந்தியை திணிப்பதாகக் கூறி பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, இந்தியை திணிக்கக் கூடாது. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழியாக இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி கொண்டு வர முடியாது.

எந்த மொழியையும் திணிக்க முடியாது. குறிப்பாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியை திணித்தால், தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வடமாநிலத்தில் கூட சில மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

மூலக்கதை