கர்ணன் ஆகிறார் தனுஷ்

தினமலர்  தினமலர்
கர்ணன் ஆகிறார் தனுஷ்

அசுரன் படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் தனுஷ் அந்த படத்திற்கு எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தலைப்பை வைக்க முயற்சி எடுத்தார். ஆனால் உலகம் சுற்றும் வாலிபனை டிஜிட்டலுக்கு மாற்றி மீண்டும் வெளியிடப்போவதாக சொல்லி அப்பட நிறுவனம் டைட்டீலை கொடுக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே சிவாஜிகணேசனின் திருவிளையாடல் தலைப்பை திருவிளையாடல் ஆரம்பம் என்று மாற்றி ஒரு படத்தில் நடித்த தனுஷ், தற்போது பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் சிவாஜியின் கர்ணன் தலைப்பில் நடிக்கிறாராம்.

மேலும், அசுரனில் மஞ்சுவாரியரை தமிழுக்கு கொண்டு வந்த தனுஷ், தற்போது இன்னொரு மலையாள நடிகையான ரஜிஷா விஜயனை இந்த கர்ணன் படத்திற்காக தமிழுக்கு அழைத்து வருகிறார். இவர் மலையாளத்தில் அனுராக கரிக்கின் வெல்லம், ஜார் ஜட்டன்ஸ் பூரம், ஒரு சினிமாக்காரன், ஜூன் ஆகிய படங்களில் நடித்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாகிவிட்டவர், தற்போது இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மூலக்கதை