இயக்குனர்களை ஆச்சர்யப்படுத்தும் சாயிஷா

தினமலர்  தினமலர்
இயக்குனர்களை ஆச்சர்யப்படுத்தும் சாயிஷா

வனமகன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் சாயிஷா. பாலிவுட் நடிகையான இவர் அதன்பிறகு கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் எந்த தடையுமின்றி சினிமாவில் நடித்து வரும் அவர் காப்பான் படத்தை அடுத்து மீண்டும் ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடிக்கிறார்.

இதன்பிறகும் சில படங்களில் நடிப்பதற்கு கதை களை ஓகே பண்ணியுள்ளார். மேலும் பெரும்பாலும் நடிகைகள் திருமணமாகி விட்டாலே கவர்ச்சிக்கு தடை போட்டு விடுவார்கள். ஆனால் சாயிஷாவைப்பொறுத்தவரை எந்தவித தடையும் சொல்வதில்லை. திருமணத்திற்கு முன்பு எப்படி நடித்தாரோஅதே பாணியில் நடித்து வருகிறார்.

அதேபோல் ஆர்யாவும் அவருக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. கதைக்கு தேவையானபடி நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம். இதனால் திருமணத்தை காரணம் காட்டி கிளாமராக நடிக்க சாயிஷா மறுப்பாரோ என்று அவரை படங்களுக்கு புக் பண்ண தயங்கி நின்ற இயக்குனர்கள் இப்போது அவரது நிலை அறிந்து தாராளமாக படங்களுக்கு புக் பண்ணி வருகிறார்கள்.

மூலக்கதை