ராதிகா ஆப்தேவின் வெப்சீரிஸில் ஹாலிவுட் நடிகர்கள்

தினமலர்  தினமலர்
ராதிகா ஆப்தேவின் வெப்சீரிஸில் ஹாலிவுட் நடிகர்கள்

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, தற்போது சாந்தாராம் என்றொரு வெப்சீரிஸில் நடிக்கிறார். ஆஸ்திரேலிய சிறையில் இருந்து தப்பித்துவரும் ஒருவர் மும்பை ஸ்லம் ஏரியாவுக்கு வந்து அங்குள்ள மக்களின் ஹீரோவாக உருவெடுப்பதுதான் இந்த வெப்சீரிஸின் கதை. சாந்தாராம் என்ற நாவலைத் தழுவி உருவாகும் இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு இந்தியா, ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

மேலும், இந்த சாந்தாராம் வெப்சீரிஸில், ராதிகா ஆப்தேவுடன் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க், சார்லி ஹுன்னம் ஆகிய ஹாலிவுட் நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

மூலக்கதை