விக்னேஷ்சிவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன நயன்தாரா

தினமலர்  தினமலர்
விக்னேஷ்சிவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன நயன்தாரா

போடாபோடி, நானும் ரெளடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன். நயன்தாராவின் காதலரான இவர் தற்போது நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் என்ற படத்தை தயாரிப்பதோடு, அஞ்சலி நடிக்கும் ஒரு வெப்சீரிஸை இயக்குகிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒருபடத்தை இயக்கப்போகிறார்.

மேலும் இன்று விக்னேஷ்சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக நண்பர்கள் வாழ்த்து சொல்லி வருவதோடு, நயன்தாரா நேரில் சென்று பிறந்து நாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்தும் கலந்து கொண்டு விக்னேஷ்சிவனை வாழ்த்தியிருக்கிறார்.

மூலக்கதை