பீகாரில் மீண்டும் கனமழை, இடி மின்னல் தாக்கியதில் 12 பேர் பலி: மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பீகாரில் மீண்டும் கனமழை, இடி மின்னல் தாக்கியதில் 12 பேர் பலி: மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு இடி மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்தமாதம் பீகாரில் இடைவிடாத மழை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளநிவாரணப் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில் அங்கு மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேபாளத்தில் மழைப்பொழிவு அதிகரித்துவருவதால் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் நதிகளில் நீர்மட்டம் உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றுமுன்தினம் தெரிவித்தது. தற்போது  பீகாரிலும் மின்னலுடன் கடும் மழை பெய்துவருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் கூறுகையில், பீகாரில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு இடி மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பேரழிவு கட்டுப்பாட்டு அறையின் தகவலின்படி இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த சம்பவங்களால் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பாட்னாவில் பத்திரிகை சேமிப்பிற்கான காவல்நிலையக் கட்டிடம் ஒன்றின் மீதும் அருகிலுள்ள கூடாரத்தின் மீதும் மரம் விழுந்ததில் பத்து காவல்துறை ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு பெய்த கனமழையால் பாட்னாவின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பெய்துவரும் கடும் மழையினால் கடந்த இரண்டு மூன்று நாட்களில் கங்கா நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை