தத்தளிக்கும் அனில் அம்பானி திவாலாகும் இன்னொரு நிறுவனம்

தினமலர்  தினமலர்
தத்தளிக்கும் அனில் அம்பானி திவாலாகும் இன்னொரு நிறுவனம்

புதுடில்லி : அனில் அம்பானிக்கு சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ஓர் அங்கமான, ஜி.சி.எக்ஸ்., எனும், ‘குளோபல் கிளவுட் எக்ஸ்சேஞ்ச்’ நிறுவனம், திவால் நடவடிக்கைக்காக விண்ணப்பித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, திவால் நடவடிக்கைக்கு ஆளானது. இந்நிலையில், தற்போது இன்னொரு நிறுவனமான, ஜி.சி.எக்ஸ்., நிறுவனமும் திவால் நடவடிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது.இந்நிறுவனம், ஆக., 1ம் தேதியுடன் முதிர்வடைந்த, 7 சதவீத பத்திரங்களுக்காக, 2,500 கோடி ரூபாய் வழங்க வேண்டியதிருந்தது. ஆனால், இந்த தொகையை, நிறுவனத்தால் வழங்க முடியாமல் போய்விட்டது.

இதையடுத்து, இந்நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு சென்றுள்ளது. அண்மையில், இன்னொரு நிறுவனமான, ’ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங்’ கடுமையான நிதி சிக்கலில் மாட்டியுள்ளதாக செய்திகள் வந்தன.அனில் அம்பானியின், ரிலையன்ஸ் நிறுவனம், கடன்களை குறைக்கும் முயற்சியில், அதன் சொத்துக்களை விற்று, 21 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக, ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும் முயற்சிகள் கைகூடவில்லை.

மூலக்கதை