சுப்மன் , கருண் அரை சதம் | செப்டம்பர் 17, 2019

தினமலர்  தினமலர்
சுப்மன் , கருண் அரை சதம் | செப்டம்பர் 17, 2019

மைசூர்: தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் சுப்மன் கில், கருண் நாயர் அரை சதம் அடித்தனர்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா ‘ஏ’, இந்திய ‘ஏ’ அணியுடன் இரண்டு  அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி கர்நாடகாவின் மைசூரில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

இந்திய ‘ஏ’ அணிக்கு ஈஸ்வரன் (5), பிரியங்க் பன்சால் (6) ஏமாற்றினர். சுப்மன் கில், கருண் நாயர் சிறப்பாக செயல்பட்டனர். நம்பிக்கையுடன் விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். சுப்மன் கில் 92 ரன்களில் அவுட்டானார். இதன் மூலம், நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக சத வாய்ப்பை இழந்தார். முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 90 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய ‘ஏ’ அணி 3 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் (78), கேப்டன் சகா (36) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மூலக்கதை