பாக்., வீரர்களுக்கு பிரியாணி ‘நோ’ | செப்டம்பர் 17, 2019

தினமலர்  தினமலர்
பாக்., வீரர்களுக்கு பிரியாணி ‘நோ’ | செப்டம்பர் 17, 2019

லாகூர்: பாகிஸ்தான் அணி வீரர்கள் பிரியாணி சாப்பிட பயிற்சியாளர் மிஸ்பா தடை விதித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின்  புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மிஸ்பா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர் புதிய தேர்வுக்குழு தலைவராகவும் பொறுப்பேற்றார். தனது முதல் பணியாக, வீரர்களின் உடற்தகுதியில் கவனம் செலுத்தி உள்ளார். இதற்காக, தேசிய அணி மற்றும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். பிரியாணி, எண்ணெயில் பொறித்த உணவுகள், பீட்சா, இனிப்பு வகைகளுக்கு தடை விதித்துள்ளார்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் சாஜ் சாதிக் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ பயிற்சியாளர் மிஸ்பா, வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர்கள் பிரியாணி, அதிக கொழுப்புள்ள மாமிசம் உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ள தடைவிதித்துள்ளார்,’ என, தெரிவித்துள்ளார்.

கடந்த உலக கோப்பை தொடரின்போது, பாகிஸ்தான் அணியினர் இரவு நேரத்தில் பீட்சா உள்ளிட்ட உணவுகளை உட்கொண்டதாக, அந்நாட்டு ரசிகர்கள் புகார் எழுப்பினர். தற்போது, மிஸ்பாவின் கட்டுப்பாட்டால் இதற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை