41 பந்தில் சதம் விளாசல் | செப்டம்பர் 17, 2019

தினமலர்  தினமலர்
41 பந்தில் சதம் விளாசல் | செப்டம்பர் 17, 2019

டப்ளின்: ‘டுவென்டி–20’ லீக் போட்டியில் ஸ்காட்லாந்து வீரர் முன்சே 41 பந்தில் சதம் விளாசினார். .

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின.

முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணிக்கு முன்சே, கேப்டன் காட்சர் ஜோடி அபார துவக்கம் தந்தது. மேக்ஸ் வீசிய 13வது ஓவரில் 4 சிக்சர், 2 பவண்டரி அடித்த முன்சே, 41வது பந்தில் சதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தபோது, காட்சர் (89) ஆட்டமிழந்தார். முடிவில், ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. முன்சே (56 பந்து, 127 ரன், 5 பவுண்டரி, 14 சிக்சர் ) அவுட்டாகாமல் இருந்தார்.

பின் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு கேப்டன் பீட்டர் அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார். நெதர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டும் எடுத்து, 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பீட்டர் (96), புளோய்டு (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

3

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், குறைந்த பந்தில் (41) சதம் விளாசிய 3வது வீரரானார் முன்சே.இரண்டாவது இடத்தில் ருமேனியாவின் பெரியாழ்வார் (எதிர்– துருக்கி, 39 பந்து, 2019) உள்ளார். தென் ஆப்ரிக்காவின் மில்லர் (எதிர்– வங்கதேசம், 2017), இந்தியாவின் ரோகித் (எதிர்– இலங்கை, 2017), செக் குடியரசின் விக்ரமசேகரா (எதிர்– துருக்கி, 2019) தலா 35 பந்துகளில் சதம் அடித்து முதலிடம் வகிக்கின்றனர். 

6

ஸ்காட்லாந்து அணி 252 ரன்கள் குவித்தது. இது, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் எடுக்கப்பட்ட 6வது அதிகபட்ச ‘ஸ்கோராக’ அமைந்தது. முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்களுடன் (எதிர்– அயர்லாந்து) உள்ளது.

14

இப்போட்டியில், முன்சே மொத்தம் 14 சிக்சர் அடித்தார். இதனையடுத்து, சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் ஒரே இன்னிங்சில், அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை, ஆஸ்திரேலியாவின் பின்ச் (எதிர்– இங்கிலாந்து) உடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா (16 சிக்சர், எதிர்– அயர்லாந்து) உள்ளார்.

3

 

 

மூலக்கதை