யசோதா பென்னை சந்தித்தார் மம்தா: இன்று மோடியுடன் சந்திப்பு

தினமலர்  தினமலர்
யசோதா பென்னை சந்தித்தார் மம்தா: இன்று மோடியுடன் சந்திப்பு

கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், பா.ஜ.,வுக்கு எதிராகவும், மம்தா பானர்ஜி உட்பட, அக்கட்சியினர் கடுமையான விமர்சனம் செய்து வந்தனர்.இந்தாண்டு நடந்த, லோக்சபா தேர்தலின்போது, இந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி, டில்லியில் இன்று மாலை சந்தித்து பேச உள்ளார்.

பா.ஜ., தேசிய பொதுச் செயலர், கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது: சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக, கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமாரிடம், சி.பி.ஐ., விசாரிக்க உள்ளது. இதற்காக, 'சம்மன்' அனுப்பியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டால், மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் பாதி பேர் மற்றும் கட்சியின் பல மூத்த தலைவர்கள், சிறைக்கு செல்வர்.அதனால், ராஜிவ் குமாரை காப்பாற்றுவதற்காக, தன் கடைசி முயற்சியாக, பிரதமரை சந்திக்கிறார் மம்தா. ஆனால், இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.

' யசோதா பென்னுடன் சந்திப்பு'


டில்லிக்கு புறப்படும் முன், கோல்கட்டா சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் வந்த மம்தா பானர்ஜி , மோடியின் மனைவி யசோதா பென்னை சந்தித்தார். இருவரும் சில நிமிடம்சந்தித்து நலம் விசாரித்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் செல்வதற்காக வந்ததாக ,மம்தா பானர்ஜியிடம் யசோதா பென் கூறினார்.

மூலக்கதை