நெதர்லாந்துடன் டி20 போட்டி ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்ஸி 56 பந்தில் 127 ரன் விளாசல்

தினகரன்  தினகரன்
நெதர்லாந்துடன் டி20 போட்டி ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்ஸி 56 பந்தில் 127 ரன் விளாசல்

டப்ளின்: நெதர்லாந்து அணியுடன் நடந்த டி20 போட்டியில், ஸ்காட்லாந்து அணி தொடக்க வீரர் ஜார்ஜ் முன்ஸி அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.அயர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. டாசில்  வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீசியது. ஸ்காட்லாந்து தொடக்க வீரர்கள் ஜார்ஜ் முன்ஸி - கேப்டன் கைல் கோயட்சர் இருவரும் நெதர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர்.இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15 ஓவரில் 200 ரன் சேர்த்து மிரட்டியது. கோயட்சர் 89 ரன் (50 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்), மைக்கேல் லீஸ்க் (0), பெரிங்டன் 22 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஸ்காட்லாந்து 20 ஓவரில் 3 விக்கெட்  இழப்புக்கு 252 ரன் குவித்தது. முன்ஸி 127 ரன் (56 பந்து, 5 பவுண்டரி, 14 சிக்சர்), ஓலி ஹாரிஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து, 58 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் பீட்டர் சீலர் அதிகபட்சமாக 96 ரன் (49 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். எட்வர்ட்ஸ் 37,  பாஸ் டி லீட் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஜார்ஜ் முன்ஸி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மூலக்கதை