சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அல்லது 3 வாரங்களில் முழுமையாக பணிகளை தொடங்கும்: சவுதி அரேபியா அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அல்லது 3 வாரங்களில் முழுமையாக பணிகளை தொடங்கும்: சவுதி அரேபியா அரசு அறிவிப்பு

சவுதி: சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முழுமையாக பணிகளை தொடங்கும் என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை  சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான அராம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் குரைஷ் எண்ணெய் வயல் மீதும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகத்தை சவுதி அரேபியா அரசு பாதியாக குறைத்துள்ளது. எண்ணெய் விற்பனையை சவுதி அரேபியா அரசு குறைந்திருப்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்கும் பணிகளை முழுவீச்சில் சவுதி அரேபியா அரசு முடுக்கிவிட்டுள்ளது. தொடர்ந்து சேதங்கள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அராம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

மூலக்கதை