'மாபியா' டீசர்: ஆச்சரிய வரவேற்பு

தினமலர்  தினமலர்
மாபியா டீசர்: ஆச்சரிய வரவேற்பு

'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். அவர் அடுத்து இயக்கிய 'நரகாசூரன்' படம் பல்வேறு காரணங்கள் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

அவரது மூன்றவாது படமாக இயக்கிய 'மாபியா' படத்தின் டீசரை நேற்று மாலை வெளியிட்டார்கள். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் அப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யு டியுபில் 20 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. பொதுவாக முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும். இந்த டீசருக்கான வரவேற்பு இளம் இயக்குனரான கார்த்திக் நரேனுக்குக் கிடைத்துள்ள ஒன்று என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

மூலக்கதை