கமலுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி

தினமலர்  தினமலர்
கமலுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி

உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன ஹிந்தி கருத்தினால் தமிழகத்தில் மீண்டும் ஹிந்திக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்பு குரலும் ஒலிக்க தொடங்கி உள்ளன. இப்படியான நிலையில், ‛‛இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டி விடும்'' என ஹிந்தி எதிர்ப்பு குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார் கமல்ஹாசன்.

அதேசமயம் ஹிந்தி மொழியின் தேவை குறித்து கருத்து பதிவிட்டிருந்தார் நடிகை காயத்ரி ரகுராம். அதோடு கமலின் வீடியோவிற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், ‛‛விருந்து சாப்பிட வாழை இலை தேவை, நம்மை தாங்கிப்பிடிக்க ஒன்றிணைக்க ஒரு மொழி தேவை. அதற்காக நம்முடைய மொழியை, கலாச்சாரத்தை விட்டு விட வேண்டும் என்பதில்லை'' என்று கமலின் கருத்துக்கு எதிர்கருத்து பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

மூலக்கதை