குண்டு வெடிப்பு ஆப்கானில் 48 பேர் பலி

தினமலர்  தினமலர்

காபூல், ஆப்கானிஸ்தானில் செப்.28ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பர்வான் மாகாணத்தில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தேர்தல் பிரசாரத்தில் நேற்றுஈடுபட்டார்.பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த தலிபான் தற்கொலைப் படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.இதில் 26 பேர் பலியாகினர். 42 பேர் காயம் அடைந்தனர். அதிபர் கனி பேசிக் கொண்டு இருக்கையில் இந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அவர் காயமின்றி தப்பினார்.மத்திய காபூலில் உள்ள அமெரிக்க துாதரகத்திற்கு அருகே மற்றொரு குண்டு வெடித்தது. இதில் 22 பேர் பலியாகினர்; 38 பேர் காயம் அடைந்தனர்.இந்த இரு தாக்குதல்கள் குறித்து தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியாக தான் பிரசார கூட்டத்தில் குண்டு வெடித்தது. தேர்தல் பிரசார கூட்டங்களை மக்கள் புறக்கணிக்குமாறு ஏற்கனவே எச்சரித்து இருந்தோம். அதையும் மீறி கலந்து கொண்டு உயிரிழந்தால் அது அவரவரின் பொறுப்பு.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை