சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு

தினகரன்  தினகரன்
சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு

தோகா:  சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அல்லது மூன்று வாரங்களில் பணியை தொடங்கும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை பாதியாக குறைத்து சவுதி அரசு. இந்த நிலையில் சேதங்கள் அனைத்தும் சரி செய்ய 2 அல்லது 3 வாரங்கள் ஆகும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.  முன்னதாக சவுதி அரேபியாவின் புக்யக் என்ற இடத்தில் செயல்படும் அரசுக்கு சொந்தமான ‘அராம்கோ’ என்ற நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும்,  குரைஸ் எண்ணெய் வயல் மீதும்  டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. டிரோன் தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெய் சப்ளையை சவுதி அரசு பாதியாக குறைத்துள்ளது.எண்ணெய் சப்ளையை சவுதி அரேபிய அரசு குறைத்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அல்லது பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.  சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது  ஏமனில் போராடி வரும் ஹவுதி அமைப்பினரோ இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து சேதங்கள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு இன்னும் இரண்டு அல்லது 3 வாரங்களில் அராம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பழையபடி செயல்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை